சேர கொங்கதேச தெய்வச் சரித்திரம்
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. சேர கொங்கதேசத்தின் ஆதி தெய்வங்கள்: அகத்தியர், தொல்காப்பியர் ஆகியோரின் சங்ககாலங்களில் சேர தேசமாகிய கொங்கதேசத்தில் குல மரபுகளின்படி (கௌல பஞ்சமகார பலி பூஜைகள்) சைவ வழிபாடு நடந்தது: https://brahmayamala.blogspot.com/2025/09/vishnukranta-tantras.html இதனை அகத்தியரது நண்பரான திருமூலர், அவரது சீடரான கஞ்சமலை காலாங்கி, பின் கோரக்கர் ஆகியோர் குருக்களாகப் பாலித்து வந்தனர். மோரியரால் கடைச்சங்ககாலத்தில் துவங்கி களப்பிரர் காலம் (சுமார் 600 CE) வரை சாக்கியமான பௌத்தமும், அமணமான சமண ஜைனமும், ஆசீவகமான ஆஜீவிகமும் மெல்ல தங்கள் கிளைகளை சாக்த குல மார்க்கமான குலக்கோயில்களின் எதிரே துவங்கி, நீலகேசிப் பிரட்டுக் குறுங்காப்பிய வழியில், கொங்கரை மதம்மாற்றத் துவங்கின. இன்றும் பூந்துறை கரியகாளி கோயில் எதிரேயும், வெள்ளோடு பொன்காளி, ஆய் கோயில்களின் எதிரிலும், விஜயமங்கலம் விஜயாபுரி கோயிலின் எதிரிலும், பரஞ்சேர்வழி ஆய் கோயில் எதிரிலும் இச்சமணப்பள்ளிகள் இயங்கிவருகின்றன. இரு கருநட சமண பூஜகர் குடும...