சேர கொங்கதேச தெய்வச் சரித்திரம்
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
சேர கொங்கதேசத்தின் ஆதி தெய்வங்கள்:
அகத்தியர், தொல்காப்பியர் ஆகியோரின் சங்ககாலங்களில் சேர தேசமாகிய கொங்கதேசத்தில் குல மரபுகளின்படி (கௌல பஞ்சமகார பலி பூஜைகள்) சைவ வழிபாடு நடந்தது:
https://brahmayamala.blogspot.com/2025/09/vishnukranta-tantras.html
இதனை அகத்தியரது நண்பரான திருமூலர், அவரது சீடரான கஞ்சமலை காலாங்கி, பின் கோரக்கர் ஆகியோர் குருக்களாகப் பாலித்து வந்தனர்.
மோரியரால் கடைச்சங்ககாலத்தில் துவங்கி களப்பிரர் காலம் (சுமார் 600 CE) வரை சாக்கியமான பௌத்தமும், அமணமான சமண ஜைனமும், ஆசீவகமான ஆஜீவிகமும் மெல்ல தங்கள் கிளைகளை சாக்த குல மார்க்கமான குலக்கோயில்களின் எதிரே துவங்கி, நீலகேசிப் பிரட்டுக் குறுங்காப்பிய வழியில், கொங்கரை மதம்மாற்றத் துவங்கின.
இன்றும் பூந்துறை கரியகாளி கோயில் எதிரேயும், வெள்ளோடு பொன்காளி, ஆய் கோயில்களின் எதிரிலும், விஜயமங்கலம் விஜயாபுரி கோயிலின் எதிரிலும், பரஞ்சேர்வழி ஆய் கோயில் எதிரிலும் இச்சமணப்பள்ளிகள் இயங்கிவருகின்றன. இரு கருநட சமண பூஜகர் குடும்பங்களும் பூந்துறையிலும், விஜயமங்கலத்திலும் உள்ளனர்.
இதனால் கொங்கரில் ஒரு பிரிவினர் படைத்தலையர், ஜைன செட்டிமார் என்று சமணச்சார்பாகப் போயினர். அன்னியரது பிடி கொங்கில் வலுத்தது. அன்றைய அகச்சமயமான சாக்த பூத தந்திரமான குலம் (கௌலம்) குன்றியது. இச்சமயத்தில் கோரக்கர் அருளால் வாம வழியினைக் கொங்கர் தழுவினர்.
பின்னர் சாலிவாகனனது தளபதியான அச்சுதககளப்பாளன், மூவேந்தர்களையும் 12 ஆண்டுகள் திருக்கழுக்குன்றம் அருகே ஆமூர் கோட்டையில் சிறை வைக்குமளவு நிலமை சீர்கேடானது.
இதனால் கூன் பாண்டியன் காலத்தில் (சுமார் 600 CE) , காளத்தி வேட்டுவரை அழைத்து, மூவேந்தர் தங்களை விடுவித்துக் கொண்டு, சமண சாக்கிய ஆசீவகம் உள்ளிட்ட நாத்திக அன்னிய புறச்சமயங்களை வீழத்தி, அகச்சமயத்தை நிலைநாட்டினர்.
பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தில் (சுமார் 800 CE) குல வழிபாட்டு முறையோடான சைவ சித்தாந்த சன்மார்க்கம் வலுப்பெற்றது.
காளாமுக லிங்கதாரி மதத்தவரான சாளுக்கிய சோழர் காலத்தில் (சுமார் 1100), சாக்கிய, சமண, ஆசீவகம் முதலான நாத்திகப் புறச்சமயங்களிலிருந்து மதம்மாறியவர்களான வடநாட்டு வடமன் ராமானுஜனது ஶ்ரீவைஷ்ணவம், காளாமுக லிங்கதாரி மதத்தவர் பலபட்டரை ஜாதிகளாகக் கொங்கதேசம் புகுந்தனர். ராமானுஜன் பரமத்தி வேலூர் செருக்கலை லத்திவாடியிலும், வேதாந்த தேசிகன் சத்தியமங்கலத்திலும் தஞ்சம் புகுந்தனர். கன்னடக் காளாமுக லிங்கதாரியர் மன்னனது ஆதரவில் புகுந்தனர்.
பாண்டியரைத் துரோகமாக வீழ்த்தி (சுமார் 1450 CE), நாயக்கர் காலத்தில் பாளையப்பட்டினரானோர் காலிங்கராய, வாணராய பாளையக்காரர்கள். கொங்க வேளிரான நாட்டார் இவர்களைப் புறக்கணிக்க, இவர்கள் ஆழியாற்று ஆனைமலை வனங்களை அழித்து புதிய நாடுகளை உருவாக்கிக்கொண்டனர். மைசூரர் காலத்தில், தங்களது சைவ சித்தாந்த நெறியிலிருந்து மாறி, முறையே சமணராக இருந்து கீழுள்ள மதங்களுக்கு மாறிய அரச ஒக்கலிகரான மைசூராரது வடகலை வைணவ பரகால மட ஜீயரையும், பேரூர் குடி ஒக்கலிக லிங்காயத சாமியாரையும் பற்றிக்கொண்டு வடகலை ஶ்ரீவைஷ்ணத்திறகும், பேரூர் லிங்காயதத்திற்கும் மதம்மாறி இன்றுவரை அனுஷ்டிக்கின்றனர்.
இனி சங்ககால ஆதிச் சேரர் மரபுகளைப் பார்ப்போம்:
மாரி ஆய்:
https://ullivilavu.blogspot.com/2012/08/blog-post.html?m=1 is உருவாக்கியது www.bloks.com.au,.
முத்துமாரி (பிறதேச மஹாமாரி அல்லள்)
மதிற்கரைச் செல்லாண்டி ஆய்:
"மறம் மிகு தானை, பசும்பூண், பொறையன்
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனந்தலை 5
மா இருங் கொல்லி உச்சித் தாஅய்,
ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர்
3
புலம் கந்தாக இரவலர் செலினே" - அகநானூறு 303
கொங்கரது காணிப்பட்டயம் உள்ளிட்ட பல சரித்திர ஆவணங்களில் சேரரது குலதெய்வமாகக் குறிப்பிடப்படுபவள் மதுக்கரைச் செல்லாண்டி. மூவேந்தருக்கும் எல்லை வகுத்துக்கொடுத்ததால், "மண்ணைப் பகிர்ந்த மதிற்கரைச் செல்லாண்டி" என்றும் அழைக்கப்படுகிறாள். ஓரிரவில் மதிலும், கரையுமாக எல்லையை வகுத்து மூவேந்தருக்கும் நாட்டினைப் பிரித்துத் தந்தவள் ஆய். இது எனது விக்கிபீடியா கட்டுரை:
https://en.m.wikipedia.org/wiki/மதுக்கரை_சுவர்
https://madukkaraiwall.blogspot.com/2011/04/blog-post.html
செல்லி, வடக்குவாயிற் செல்வி, செல்லத்தம்மன், செல்லாத்தா, செல்லாய், செல்லியாண்டி, சிவசெல்வி, செல்வநாயகி என்ற பெயர்கள் பெற்றவள் ஆவாள்.
காசியிலிருந்து கொல்லிமலையின்மீது தனது சகோதரனான மாயோன் பெரியசாமியுடன் வந்திறங்கி, கணவனான சிவனைத்தேடி வந்தவளாக இருக்கிறாள் ஆய். உப்பாற்றைக் கரைப்போட்டுக் கரைபோட்டானாறாக்கி, மதிற்கரை அமைத்து மதுரை வடக்குவாயில் அமர்ந்தவள் ஆய். மீனாட்சி என்பது வாமவழியினளான ஆயின் தட்சிண உருவேயாகும்:
https://madhurapathi.blogspot.com/2011/12/blog-post.html
கொங்கதேசத்தில் சேரரால் (circa 894 CE வரை) நாட்டுக்கவுண்டர்களானோர் அனைவருக்கும் ஆதி காணியாட்சிக் குலதெய்வமாக உள்ளாள்.
மாசிமலைப் பெரியசாமி:
மேற்க்கூறிய மாயனான கொல்லிமலைப் பெரியசாமி கொங்கதேசத்தில் தனது புலி வாகனத்தில் அரிவாளுடன் அமர்ந்து கொங்கதேசக்கோயில்களப் பாலிக்கிறார்.
சோழதேசத்தில் புலிமீது ஈட்டியால் குத்தியபடி நின்றவாறு, இடது கையில் கதையுடன் உள்ளார்:





.jpeg)

.jpg)

Comments
Post a Comment